சென்னை, ஏப்.29 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்டோ எல்.பி.ஜி. உள்ளிட்ட எரிபொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் (LPG) விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் எவ்வித தடையுமின்றி மேற்கொண்டு வருகின்றன. நுகர்வோருக்குத் தேவையான எரிவாயு உருளைகள் உடனுக்குடன் சென்றடைவதை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
ஆட்டோக்களுக்குப் பயன்படுத் தப்படும் ஆட்டோ எல்.பி.ஜி. எரிவாயுவும் அனைத்து பங்க்குகளிலும் போதுமான அளவில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. இந்த எரிவாயு முறையாகக் கிடைப் பதை உறுதி செய்யத் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விநி யோகச் சங்கிலியில் எவ்வித தொய்வும் ஏற் படாத வாறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் ஆட்டோ எல்.பி.ஜி. விநியோகம் சீராக உள்ளதால், பொதுமக்கள் தட்டுப்பாடு குறித்த கவலைகொள்ளத் தேவையில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
