ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் சிவில் 7, எலக்ட்ரிக்கல் 4 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்.,
வயது: 20-30 (6.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: இணையவழி தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, மதுரை
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 6.5.2026
விவரங்களுக்கு: opportunities.rbi.org.in
பொறியியல் முடித்தவருக்கு வங்கியில் வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபிசர் பதவியில் சிவில் 21, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 20-30 (5.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: இணையவழி தேர்வு, நேர்முகத் தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில், விருதுநகர்
விண்ணப்பிக்கும் முறை: இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 59
கடைசிநாள்: 5.5.2026
விவரங்களுக்கு: pnb.bank.in
‘இன்ஜினியர்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் பணி

ஒன்றிய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசோசியேட் இன்ஜினியர் 78, அசோசியேட் ஆபிசர் 15 என மொத்தம் 93 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18- 35 (4.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: வாக் – இன் – இன்டர்வியூ.,
இடம்: Engineers India Limited, Sector-16 (On NH-48), Gurugram, Haryana- – 122 001
தேதி: 2026 மே 11 – 29.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 4.5.2026
விவரங்களுக்கு: eil.co.in
