ஒன்றிய அரசுத் துறைகளில் சுருக்கெழுத்தர்கள் பணி

1 Min Read

ஒன்றிய அரசுத் துறைகளில் போட்டித் தேர்வு மூலம் 731 சுருக்கெழுத்தர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை அரசுப் பணி யாளர் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய நிதி அமைச்சகத்தின்கீழ் உள்ள வருவாய்த் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவற்றில் குரூப்-சி, குரூப்-டி பிரிவுகளில் 731 சுருக்கெழுத்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, சுருக்கெழுத்துப் பயிற்சியும் அவசியம். குரூப்-டி பிரிவுக்கு வயது வரம்பு 27, குரூப்-சி பிரிவுக்கு 30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப் படும். உரிய வயது, கல்வித் தகுதி உடையவர்கள் https://ssc.gov.in என்ற இணையதளம் வாயிலாக மே 15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்கட்டமாக, கணினி வழி எழுத்துத் தேர்வு ஜூலைஆகஸ்டில் நடைபெறும். பொது நுண்ணறிவுத் திறன், ரீசனிங், பொது அறிவு, ஆங்கில மொழி ஆகிய 3 பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும் என்று எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *