அனில் அம்பானியின் ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

1 Min Read

மும்பை, ஏப். 29- வங்கிக் கடன் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் லிமிடெட் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நடவடிக்கையையும் சேர்த்து, இதுவரை அனில் அம் பானி குழுமத்திற்குச் சொந்தமான மொத்தம் ரூ.19,344 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் மகாராட்டிரா ஆகிய வங்கிகளில் ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியதாக (சுமார் ரூ.17,000 கோடி மோசடி) சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *