தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில், உலகப் புத்தக நாள், பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்கம்

1 Min Read

தஞ்சாவூர், ஏப். 28- தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில் பாரதி தாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.  பேராசிரியர் குட்டிமணி வரவேற்றார். குந்தவை நர்சிங் கல்லூரியின் நிர்வாக அலுவலர் பாஸ்கர் அவர்கள் தலைமை வகித்தார்.

மன்ணை நாராயணசாமி பிசியோதெர பி கல்லூரி துணை முதல்வர் அ.சதீஷ்குமார், படிப்பக உறுப்பினர் இரா. செந்தூரப் பாண்டியன், தஞ்சை வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் நெல்லுப்பட்டு இராமலிங்கம் உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை பிரவுஷர் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ரிப்பன்  வெட்டி தொடங்கி வைத்தார். புத்தக கண்காட்சியில் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் கி.வீரமணி. முத்தமிழ் அறிஞர் கலைஞர். எழுத்தாளர்கள் இறையன்பு, வைரமுத்து, தொ.பரமசிவம், ஜெயகாந்தன். எஸ்.இராமகிருட்டிணன். சு.தமிழ் செல்வன். வேலா.இராமூர்த்தி பாலமுருகன், சுஜாதா, இலட்சுமி உள்ளிட்டோரின் படைப்புகள் தன்னம்பிக்கை, கதை, கவிதை, கலை, பண்பாடு, இயலிசை அடங்கிய தமிழ், ஆங்கில நூல்கள் 15 விழுக்காடு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *