நீரிழிவு நோயால் பிற உறுப்புகள் பாதிக்கப்படுமா?-மருத்துவர் நா.மோகன்தாஸ் சிறுநீரகத்துறை வல்லுநர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை).

2 Min Read

நீரிழிவு நோயால் பிற உறுப்புகள் பாதிக்கப்படுமா?

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காத நிலையிலும் அல்லது குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரக்காத இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலோ நீரிழிவு நோய் ஏற்படும்.

அதிக உடல் எடை உள்ளவர்கள் உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், குருதியில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு பரம்பரைதன்மை காரணமாகவும் இது வரக்கூடும்.

இந்நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கவலை, கோபம், இழப்பு, பயம், போன்றவற்றாலும் நீரிழிவு நோய் வரலாம்.

வயது ஆக, ஆக உடல் உறுப்புகளின் செயல்திறனும் உடல் உழைப்பும் குறைகிறது.

ஈரலில் குளுக்கோஸ் உற்பத்தி ஆவது குறைவதாலும், தசைகளில் மற்றும் உறுப்புகளில் குளுக்கோசினை கிரகிக்கும் செயல்திறன் குறைவதும்தான், முக்கியமாக வயது முதிர்வால் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கக் காரணங்களாகும்.

வயது முதிர்ந்தவர்கள் காலையில் சாப்பிடுமுன் பரிசோதனை மேற்கொள்வது நலம்.

பிற உறுப்புகளில் பாதிப்பு

வயது முதிர்வால் நீரிழிவு நோய் ஏற்படுத்தும் பிற உறுப்புகளின் பாதிப்பு பிரச்சினைகள். குருதிக் குழாய்கள் பாதிப்பினால் சிறுநீரகம், கண், இதயம் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.

மூளை பாதிப்பினால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஞாபக மறுதி உண்டாகும்.

தன்னிச்சையாக நரம்புகள் பாதிப்பால் குருதிக் கொதிப்பு குறைந்து மயக்கம் ஏற்படும்.

சிறுநீர்ப்பை நரம்புத் தளர்ச்சியால் சரிவர சிறுநீர் பிரியாத நிலை அல்லது அடக்க முடியாமல் சிறுநீர் தன்னிச்சையாகப் பிரியும்.

மற்றவர்களைப் போல வயது முதிர்ந்தவர்களை மருத்துவ ரீதியில் அணுக முடியாது. காரணம் அவர்கள் மனநிலை, நடக்கக் கூடிய சக்தி, கண் பார்வை போன்ற பல விசயங்களை மனதில் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு இரண்டு கட்ட பாதுகாப்பு தர வேண்டும். ஒன்று அடிப்படை பாதுகாப்பு. அடுத்து நீரிழிவினால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாப்பு. இவர்களுக்கு குருதியில் சர்க்கரையின் அளவை சாப்பிடுவதற்கு முன் 115 மி.கி. டெசி லிட்டருக்குக் குறைவாக வைக்க வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். முதியவர்களின் சாப்பிடக் கூடிய சக்தி, பற்களின் நிலை உணவினை விழுங்கக் கூடிய திறன் இவற்றிற்கேற்ப உணவுப் பட்டியலை உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

எளிமையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, சில ஆசனங்கள் போன்றவற்றினால் அவர்களின் உடல் நலத்தினை சீரமைக்கலாம்.

நீரிழிவிற்கான மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படியே சாப்பிட வேண்டும்.

குருதியில் சர்க்கரையின் நிலைபற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். எப்போதும் சாக்லேட், சர்க்கரை போன்றவற்றை உடன் வைத்திருக்க வேண்டும். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் இப்போது வந்துள்ள புதிய வகை இன்சுலின் அனலாக்ஸ் ஊசிகளைப் பயன்படுத்தலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *