ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஏப்.26- ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் 24.4.2026 அன்று  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘ஏழை மாணவர்களுக்காக சென்னைப் பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-2027) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *