மேற்கு வங்கத் தேர்தல் 92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

1 Min Read

புதுடில்லி, ஏப்.26- மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பதிவானது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடத்தப்படும் எஸ்.அய்.ஆர் பணிகளுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கல்யாண் பானர்ஜி கூறும்போது, ‘‘மேற்குவங்கத்தில் 23.4.2026 நடைபெற்ற தேர்தலில் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

இருப்பினும் எஸ்அய்ஆரின் போது பெயர் நீக்கம் செய்யப்பட்ட 27 லட்சம் பேரின் மேல்முறையீடு மனுக்களில் 136 மனுக்கள் மட்டுமே தீர்ப்பாயத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.

அப்போது, இந்திய குடிமகனாக மேற்கு வங்கத்தில் பதிவான வாக்கு சதவீதத்தை கேட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், மக்கள் வாக்குரிமையை செலுத்தும் போதுதான் ஜனநாயக கட்டமைப்பு வலுப்படுவதாகவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் பெருமிதத்துடன் தெரிவித்தார். வன்முறையற்ற தேர்தலாக இருந்தது என மற்றொரு நீதிபதி ஜோய்மால்யா பாக்சி குறிப்பிட்டார்.

கூடுதல் அவகாசம்: மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மால்டாவில் மாவட்ட நீதிபதிகளை சிறைப்பிடித்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அந்த விவகாரத்தை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *