தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் வாக்குப் பதிவு அதிகரிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் வல்லுநர்கள் கணிப்பு

2 Min Read

சென்னை, ஏப்.25 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக எண் ணிக்கையில் வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேர், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர் அடங்குவர். இளம் வாக்காளர்களாக கருதப்படும்
18–-19 வயதுக்குட்பட்டவர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேரும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.99 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிருந்தது. திருத்தத்திற்கு முன்பு 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 74,07,207 பேர் குறைந்து 12 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்திலும் பெண்கள் முன்னிலை வகித்துள் ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்த மாக 85.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 83.57 சதவீதம் வாக்களித்துள்ள நிலையில், பெண்கள் 85.76 சதவீதம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் அவர் களின் ஈடுபாடு அதிகரித்து வருவது தெளிவாகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பது புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பெண்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், சுய உதவி குழுக்கள் மூலம் உருவான சமூக இணைப்பு, கல்வி வளர்ச்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

தமிழ்நாடு அரசியல்

அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் பெண்களை குறிவைத்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி இருந்தன. குடும்ப நலன், விலைவாசிக் கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகள் பெண்களின் வாக்குகள் முக்கியமான தாக கருதப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் பெண்களே ஆட்சியை தீர்மானிப்பார்கள் என்ற கருத்து தேர்தலுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது.

அதற்கேற்ப, பெண்களின் வாக்குப் பதிவு அதிகரித்திருப்பது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அரசியல் கட்சி பெண்களின் நம்பிக் கையை வென்றுள்ளது என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெளிவாகும். மொத்தத்தில், பெண்களின் அதிகரித்த வாக்குப் பதிவு, தமிழ்நாட்டின் ஜனநாயக வளர்ச்சியில் புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. இது வெறும் எண்ணிக்கை உயர்வு மட்டுமல்லாமல், சமூக மாற்றத்தையும், பெண்களின் அதிகாரமளிப்பையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக கருதப் படும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்து உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *