ஜப்பானில் காட்டு தீ: 1100-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம் 2,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

2 Min Read

டோக்கியோ, ஏப். 25- ஜப்பானின் இவாட் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ வேகமாக பரவி ஒட்சூச்சி நகரை நோக்கி பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அப் பகுதியில் வசிக்கும் 2500-க்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 23.4.2026 எரிய துவங்கிய இந்த காட்டு தீ, பல இடங்களுக்கு பரவியதால் தீ-யை கட்டுக்குள் கொண்டு வர அந்த நாடு தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். இருப்பினும் தரை மற்றும் வான்வழி மூலம் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இதுவரை 1100-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் 8 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.

தீ தணியும் அறிகுறிகள் தென்படாததால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களை தங்கள் வீடுகளை விட்டு வெளி யேறுமாறு அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22 முதல் இப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் விமானங்களும் களமிறக் கப்பட்டுள்ளன.

ஒட்சூச்சியில் எடுக்கப் பட்ட டிரோன் படக் காட்சிகள், குடியிருப்புப் பகுதிகளை நோக்கி காட்டு தீ தீப்பிழம்புகள் நெருங்குவதையும், அரு கிலுள்ள காடுகளிலிருந்து அடர்த்தியான புகை சூழ்வதையும் காட்டு கின்றன. காட்டுத் தீயின் கோரமுகம் தீவிரமாக இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை.

அறிக்கைகளின்படி, ஜப்பானில் இந்த காட்டுத்தீயின் தீவிரத்திற்கு வறண்ட குளிர்கால நிலைமைகளே ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவாத்தே மாகாணத்தின் ஒஃபுனாட்டோ நகரில் ஏற்பட்ட தீ, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இருந்தது.

தற்போது புதிதாக ஏற்படும் காட்டு தீ சார்ந்த விபத்துகளும் அதன் தீவிரத்திற்கு இணையாக உள்ளன. பலத்த காற்று தொடர்ந்து தீப்பிழம்புகளை அதிகப் படுத்தி வருவதால் தீயை அணைக்கும் பணிகள் மேலும் சவாலானதாக மாறியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *