டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கு மாநிலங்களவையில் புதிய தாக்கீது: 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து.
* மும்பை டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயம் மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும், சட்டத் திருத்தம் கொண்டு வர மகாராட்டிரா அரசு முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆம் ஆத்மி’யில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், அங்கிருந்து 7 உறுப்பினர்கள் விலகி பாஜகவில் இணைவது, ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அசோக் மிட்டல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
* பஞ்சாபில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கட்சி மாறிய போதிலும், என்.டி.ஏ. அணிக்கு மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது.
* எண்ணெய் சேமிப்பில் சீனா முதலிடம். 1400 பில்லியன் பாரல் சேமிப்பு. இந்தியா 21 மில்லியன் பாரல் மட்டுமே சேமிப்பு வைத்துள்ளது. நம்மை விட சிறிய நாடான தெற்கு கொரியா 79 மில்லியன் பாரல் சேமிப்பு உள்ளது – அமெரிக்க எனர்ஜி துறை அறிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதலில் மேற்கு வங்கம், அடுத்து டில்லி’: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு மம்தா விடுத்த எச்சரிக்கை. ஒன்றியத்தில் ஆட்சி அமைப்பதை தான் விரும்பவில்லை என்றும், ஆனால் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றவே விரும்புவதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு ஜே.டி.யு. தலைவர் நிதிஷ் குமாரை, பாஜக கட்டாயப்படுத்தியதாக ஆர்.ஜே.டி. செயல் தலைவர் தேஜஸ்வி அரசு கோரியிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது, மாநில சட்டமன்ற அவையில் குற்றச்சாட்டு. நிதிஷ்குமாரை அரசியல் ரீதியாக “முழுமையாக ஒழித்துக் கட்டுவதையே” பாஜக குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தி இந்து:
* கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளின் அதிகரிப்பு விகிதம் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகப் பதிவு. சதவீத அடிப்படையில் தமிழ்நாடு சாதனை அளவிலான வாக்குப்பதிவை எட்டி இருந்தபோதிலும், முந்தைய தேர்தலோடு (2021) ஒப்பிடுகையில், இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் அதிகரிப்பு விகிதமானது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
தி டெலிகிராப்:
* ‘வங்காளத்தின் மிகப்பெரிய தூதர்’: மோடிக்கு நன்றி தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ்; டில்லியில் உள்ள யமுனை நதி மாசடைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அதே வேளையில், மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி நதியின் நீர் தூய்மையாக இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடியால் இங்கு படகு சவாரி செய்ய முடியும் என்று மம்தா விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மூன்று ஆண்டுகளில், உலக அளவில் பள்ளிகளில் கைப்பேசி தடை இரு மடங்காக அதிகரித்துள்ளது: யுனெஸ்கோவின் ‘உலகளாவிய கல்வி கண்காணிப்பு’ (GEM) அறிக்கை. பள்ளிகளில் கைப்பேசிகளை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் அல்லது தடை செய்யும் கல்வி அமைப்புகளின் விகிதம் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது — இது 2023-இல் 24 சதவீதமாக இருந்தது, 2026-இல் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது;
– குடந்தை கருணா

