வாக்குப் பதிவு மய்யத்தில் ஓட்டுப் போட்டதை காணொலியாக வெளியிட்ட த.வெ.க. நிர்வாகி! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

1 Min Read

சென்னை, ஏப். 25- தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தடையை மீறி வாக்குப்பதிவு மய்யத்திற்குள் கைப்பேசி எடுத்துச் சென்று, தான் வாக்களித்ததை காணொலியாக வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மய்யத்தில் வாக்குப்பதிவு நடை பெற்றது. அப்போது தவெக நிர்வாகி ஒருவர், தேர்தல் விதிமுறைகளைத் துச்சமாக மதித்து தனது கைப்பேசியை உள்ளே எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் தனது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்ததோடு, விவிபேட் கருவியில் சின்னம் தென்படுவதையும் காணொலி மற்றும் ஒளிப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வாக்குப்பதிவு மய்யங்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வது மற்றும் வாக்குச் செலுத்துவதை ஒளிப்படம் எடுப்பது ஆகியவை கடுமையான குற்றமாகக்கருதப்படுகிறது.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே விடுத்திருந்த எச்சரிக்கைகள்!

விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். விதிமீறலுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாக்களிப்பதன் ரகசியத்தை உடைப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய செயலாகும். “தேர்தல் ஆணையம் இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தும், ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியே பொறுப்பின்றி செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது,” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டத்தை மீறி செயல்பட்ட அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஜனநாயகக் கடமையின் புனிதத்தைக் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *