தமிழ்நாட்டில் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் 21,000 மெகாவாட் பயன்பாடு

1 Min Read

சென்னை, ஏப். 24- தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாநிலத்தின் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதியைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாவது முறையாக மின் தேவை 21,000 மெகாவாட்டைக் கடந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

அதிகபட்ச தேவை:

ஏப்ரல் 21 அன்று இரவு 10:30 மணியளவில் உச்சத்தை எட்டியது. மொத்த பயன்பாடு: 462.38 மில்லியன் யூனிட்கள்.

மின்சாரம் மாநில அரசு (நிலக்கரி, எரிவாயு, ஹைட்ரோ): 77 மில்லியன் யூனிட்கள்.மத்திய மின் நிலையங்கள்: 127 மில்லியன் யூனிட்கள்.வெளிச் சந்தை கொள்முதல்: 86.5 மில்லியன் யூனிட் கள். கொள்முதல் செய்யப்பட் டன

கடும் வெயில் தொடங் குவதற்கு முன்பே இந்த அளவு மின் தேவை அதிகரித்துள்ளது, வாரியத்திற்குச் சவாலாக அமைந்துள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் வெப்ப அலை காரண மாக வீடுகளில் ஏசி, மின்விசிறி மற்றும் ஃப்ரிட்ஜ் பயன்பாடு நடுத்தர குடும்பங்களிலும் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என அதிகாரிகள் குறிப்பிடு கின்றனர்.

“சூரிய சக்தி, காற் றாலை மற்றும் நிலக்கரி மூலம் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கன மாகப் பயன்படுத்தினால் மின்வெட்டுப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *