புதுச்சேரி, ஏப். 24- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 63ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
முன்னதாக 21.4.2026 அன்று காலை 10.00 மணியளவில் முத்தி யால் பேட்டை பாப்பம்மா கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவிடத்தில் மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் நினைவு இல்லத்தில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் தி.இராசா, துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், முப்பால் இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர். கோ.கலியபெருமாள், நெட்டப்பாக்கம் கொம்யூன், ஏம்பலம் தெ.தமிழ் நிலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

