எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பம் தொடக்கம்!

சென்னை, ஜூன் 30– எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு  இணைய வழியில் (ஆன்லைனில்)விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. ‘நீட்’ மறுதேர்வால் தாமதம் ஆகியுள்ள மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்துகிறது.

நடப்பு 2026-2027ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. வினாத் தாள் முன் கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரண மானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு

பின்னர், நீட் மறுதேர்வு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை ஓரிரு வாரங்களில் வெளி யிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்வம்

இதன் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழ் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தல் சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnmedicalselection.org) நேற்று (29.6.2026) தொடங்கியது. மாணவ, மாணவிகள் இணைய வழியில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள், அதுதொடர் பான விவரங்கள் இணைய தளத்தில் உள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் வரை விண்ணப்பிக்கலாம். அதனால், கடைசி தேதி அறிவிக்கப் படவில்லை. கடந்த ஆண்டுபோலவே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, என்டிஏவிடம் இருந்து நீட் மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளப்படும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *