தாரகேஸ்வர்,ஏப்.20 ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். பிரதமரின் இந்த உரை, தற்போது அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா இது குறித்துப் பேசியதாவது:
“தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றியது சட்ட விதிமீறலாகும். தனது அரசியல் தோல்விகளை மறைக்கவும், வாக்காளர்களை திசைதிருப்பவும் அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளார்.” இந்த விவகாரம் மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

