ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். ஆஸ்துமா இருமல், மூச்சிரைப்பு, மார்பு இறுக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஆஸ்துமாவினால் தாக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதன் அறிகுறிகள் லேசானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடும்.
ஆஸ்துமா மருத்துவப் பயனாளிகள் தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன் அதன் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
புகை, சிகரெட் புகை, சமையல் புகை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை என பல வகைகளில் வெளியாகும் புகையின் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படுகிறது.
வாசனை திரவியம், பாடிஸ்பிரே, உணவு சமைக்கும் வாசனை, கழிவுகளின் வாசனை என ஏதாவது ஒரு வாசனையினால் ஒவ்வாமை தூண்டப்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது.
சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு தூண்டப்படுகிறது.
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோயாகும். 2019ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 26.2 கோடி பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உரிய மருந்தும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரவலாக்கும் நோக்கில் உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
தூக்க மாத்திரை
ஆஸ்துமா மருத்துவப் பயனாளிகள் எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவிற்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்.
மூச்சு திணறல் வரும்பொழுது தவிர்க்க வேண்டிய மருந்துகள் : தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரைகள், நாடித் துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து (உம் : அட்ரிரிடிரினிலின்) உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உம்:புரோபரனலால்)
சளி இறுகாமல் இருக்க, நிறைய திரவ உணவினை வாய் மூலமாக உட்கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை
சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.
புகைப் பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருள்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும்.
மூச்சுத் திணறல், இருமல், தூக்கமின்மை, காய்ச்சல் ஆகியவை வந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்கவும். (உதாரணம் :பூனை, நாய், புறா, கிளி)
தூசு, குப்பை, அழுகிய உணவுப் பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும்.
படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமா உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.
மருத்துவப் பயனாளிகள் மூச்சுத் திணறல் ஏற்படும் போது பயப்படக் கூடாது.
வீட்டில் உபயோகிக்கும் ஆக்சிஜன் உருளையை வாங்கத் தயங்கக் கூடாது. ஆக்சிஜன் உருளை உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்கக்கூடாது, வெடித்து விடும்.
தனிமை தவிர்க்கப்பட வேண்டும்.
மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும், பயிற்சியும் தேவை.
மார்பு பிசியோதெரபி தேவைப்படும் பொழுது அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை வெளிக் கொணர).
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
செய்யக் கூடியவை
முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா மருத்துவப் பயனாளிகளுக்கு மிகவும் அவசியம்.
வாகனம் ஓட்டும் போதும், சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் முகத்தைத் துணியால் மூடிக்கொள்வது அவசியம்.
ஆஸ்துமா மருத்துவப் பயனாளிகள் மருத்துவரிடம், தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளை காண்பிப்பது மிக முக்கியம்.
யோகா பயிற்சி அவசியம்.
சரியாக உட்காரும் மற்றும் தூங்கும் நிலைகள், முறைகள் தெரிய வேண்டும்.
தொப்பை, உடல் பருமனைக் குறைக்க வேண்டும்.
மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை தக்க ஆலோசனை மூலம் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா சிகிச்சை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே துவங்க வேண்டும்.
தேவைப்படும் பொழுது நீராவி பிடிக்கலாம்.
சைனஸ், வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.
இன்ப்ளூயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும்.
மருந்து பம்புகள் உபயோகிக்கும் முறையை சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவையெனில் சக்கர நாற்காலி உபயோகிக்கத் தயங்கக் கூடாது.
காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.
அவசர உதவிக்கு வீட்டில் அலாரம் பொருத்திக் கொள்ளவும்.
