அஞ்சல் வாக்கு 1.41 லட்சம் பேர் வாக்களிப்பு

சென்னை, ஏப்.19 தமிழ்நாடு முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் 1.41 லட்சம் பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 85 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அஞ்சல் (தபால்) வாக்களிக்க தகுதியானவர்கள்.

அவர்களில் அஞ்சல் வாக்களிக்க 1.91 லட்சம் விண்ணப்பித்த நிலையில் இதுவரை 1.41 லட்சம் பேருக்கு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை வரை தபால் வாக்குகள் பெறுகின்ற பணி தொடரும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *