மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு உரிய ஒரு வழி செய்ய வேண்டாமா? மக்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதாரச் சமத்துவமும், சமுதாயச் சமத்துவமும் ஏற்படும்படிச் செய்வது எப்படி? இவை இல்லாத நாட்டையும், சமுதாயத்தையும் நினைவுக் கூடம் என்றும், அடிமைச் சமுதாயம் என்றும் தான் சொல்ல வேண்டுமேயன்றி – அதையே ஒரு நாடு என்றும், சுதந்திரப் பூமி என்றும் எப்படிச் சொல்ல முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

