திருச்சி, ஏப். 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு 13.04.2026 அன்று காலை 11 மணியளவில் சமத்துவ நாள் உறுதிமொழி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் எடுக்கப்பட்டது.
அதில் முதல்வர் ஜாதி, மத பேதங்களால் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத் திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளினை மாணவர்கள் அனைவரும் ‘சமத்துவநாளாக’ கொண்டாட வேண்டும் என்று கூறியதுடன் இத்தகைய சமத்துவ நாளில் சமூகநீதிக்காகவும் மனிதநேய உரிமைக்காகவும் 93 வயதிலும் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெங்களூருவின் அண்ணல் அம்பேத்கர் அமைப்பு ‘போதிவிருட்சம் விருது’ வழங்கவுள்ளதையும் மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றனர்.
மேலும் விருது பெற்று இருக்கும் நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு அனை வரின் சார்பாகவும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

