விடுதலை வளர்ச்சி நிதி

1 Min Read

கழக வழக்குரைஞர் அணித் தலைவர், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் வீரமணி, பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் தலா 1000 ரூபாய் என, மொத்தம் 3,000 ரூபாய், விடுதலை வளர்ச்சி நிதியாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் வழக்குரைஞர் தோழர்கள். (சென்னை, 16.04.2026)

மற்றவை

நெய்வேலி வெ.ஞானசேகரன் – மலர்விழி வாழ்விணையரின் 50ஆவது இணையேற்பு நாள் மற்றும் ஞானசேகரன் 79ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன், 9 முழு ஆண்டு விடுதலை சந்தாவும், 2 முழு ஆண்டு உண்மை சந்தாவும் வழங்கினர். மேலும், பெரியார் உலகத்திற்கு இரண்டாவது முறையாக நன்கொடையாக ரூ.10,000 காசோலையும் வழங்கினர். இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்
தே.செ.கோபால் உடன் இருந்தனர். (சென்னை, 15.04.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *