‘‘அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புத் தீ டில்லியைச் சுட்டெரித்தது. டில்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்’’ என்று முதல மைச்சர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று (16.4.2026) காலை நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கண்டித்து, கருப்புக் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மசோதாவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தி, உரிமை முழக்கமிட்டார்.

