சென்னை, ஏப்.15 இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத் தன்மை அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக தள வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நேற்று (14.4.2026) அவரது சிலைக்கு மாலையணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள செய்தி வருமாறு:
“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசி யலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலை நாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலி மைப்படுத்து வோம்!
இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.
முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மை யை யும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்து வத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலை நாட்டுவோம்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

