சென்னை, திருவள்ளூரில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனமான இந்திய மசாலா வாரியத்தில் (SPICES BOARD) உள்ள தர மதிப்பீடு ஆய்வகத்தில் பயிற்சி பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங் களுக்கு தகுதியுள்ளவர்கள் 30.04.2026 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
டிரெய்னி அனலிஸ்ட் (கெமிஸ்ட்ரி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: பி.எஸ்சி., சயின்ஸ் டிகிரி / பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 20,000
டிரெய்னி அனலிஸ்ட் (மைக்ரோ பயாலாஜி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டம் (மைக்ரோ பயலாஜி) படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 20,000
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங் களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களில் சேர விரும்பு பவர்கள் https://www.indianspices.com/sites/default/files/Notification%20for%20chennai(3)(5)(1)(2).pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: SPICES BOARD,PLOT No. R-11,SIPCOT INDUSTRIAL COMPLEX,GUMIDIPOONDI, THIRUVALLUR,TAMIL NADU 601201
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.04.2026

