சென்னை, ஏப்.14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து கழகத் துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலமைப் புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2026) சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மலர்மாலை அணி விக்கப்பட்டும், ஒலி முழக்கங்கள் எழுப்பியும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சமத்துவ நாள் உறுதிமொழி
ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும், உளமார உறுதி ஏற்கிறேன் என்ற சமத்துவ நாள் உறுதி மொழியை கழக துணைத் தலைவர் எடுத்துச் சொல்ல, கூடியிருந்த கழகத் தோழர்கள் திரும்பக் கூறி உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலா ளர்கள் ஆ.வெங்கடேசன், தமிழ் பிரபாகரன், மோகன், திராவிடர் கழக மகளிரணி சி.வெற்றிச்செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, கவுதமி, பேராசிரியர் பெரியார் செல்வி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, மு.பவானி, அறிவுச்செல்வி, த.இளவரசி, த.திராவிட இலக்கியா.
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், ஓட்டேரி சி.பாசுகர், கொடுங்கையூர் கோ.தங்கமணி, பெரியார் மாணாக்கன், பெ.செல்வராஜ், சி.காமராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், ச.சஞ்சய், க.பாலமுருகன், ந.கார்த்திக், பா.பார்த்திபன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பெரியார் யுவராஜ், மு.இரா.மாணிக்கம், அய்ஸ் அவுஸ் அன்பு, க.கலைமணி, விஜய், சக்திவேல், மகேஷ், அருள், முரளி மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

