கீழடி, ஏப்.3 கீழடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பழந்தமிழ் நாகரிகத்தின் அடையாளமான கீழடியிலிருந்து தனது தேர்தல் பரப்புரையை முறைப்படி தொடங்கியுள்ளார்.
“பழந்தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் கீழடியிலிருந்து எனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கைப் போர்: இந்தத் தேர்தலை வெறும் அரசியல் போட்டியாகப் பார்க்காமல், “கீழடிக்கும் நாக்பூருக்கும் (ஆர்.எஸ்.எஸ் தலைமையகம்) இடையேயானப் போர்” என அவர் வர்ணித்துள்ளார்.
இந்த சித்தாந்தப் போராட்டத்தில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
