இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது! ஒன்றிய அரசு ஒப்புதல்

2 Min Read

புதுடில்லி, மார்ச் 25 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம், நாட்டின் அவசர கால கச்சா எண்ணெய் இருப்பு குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் திடீர் தடை அல்லது நெருக்கடி ஏற்பட்டால், இந்தியாவில் தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் 9.5 நாட்களுக்கு மட்டுமே நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய 2004-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது பின்வரும் மூன்று இடங்களில் சேமிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன:

விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்)  மங்களூரு (கருநாடகா) படூர் (கருநாடகா) விரிவாக்கத் திட்டங்கள் கூடுதல் தேவையை முன்னிட்டு, 2021-ம் ஆண்டில் ஒடிசாவின் சந்திகோல் மற்றும் கருநாடகாவின் படூர் ஆகிய இடங்களில் புதிய சேமிப்பு நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இருப்பினும், இந்த நிலையங்கள் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய எரிபொருள் இறக்குமதி சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க, டில்லியில் இன்று ஒன்றிய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியலால் மீட்கப்பட்ட தேவாலயம் 

கேரளாவில் 200 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் இடமாற்றம்!

கொச்சி, மார்ச் 25 மனிதனின் நம்பிக்கையும் அறிவியலின் நுட்பமும் கைகோர்த்தால் வரலாற்றைச் சிதைக்காமல் பாதுகாக்க முடியும் என்பதற்குச் சான்றாக, கேரளாவின் தேவாரா பகுதியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் தேவாரா பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜான்ஸ் நெபுமியன் தேவாலயம், சுமார் 200 ஆண்டுகள் பழைமையானது. போர்த்துகீசிய கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னம், ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக இடிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால், மக்களின் நம்பிக்கையையும் அந்த இடத்தின் பாரம்பரியத்தையும் சிதைக்க விரும்பாத தேவாலய நிர்வாகம், நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதை அப்படியே நகர்த்த முடிவு செய்தது. சுமார் 15 அடி உயரமுள்ள இந்த வழிபாட்டுத் தலத்தை (குரிஷாதி), அதன் அஸ்திவாரத்தோடு பத்திரமாகத் தோண்டி எடுத்து இடமாற்றும் பணி பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

பூமியிலிருந்து அஸ்திவாரத்துடன் தூக்கி நகர்த்தும் ‘Building Lifting and Shifting’ தொழில்நுட்பம்மூலமாக. தேவாலயத்திற்குச் சொந்தமான பாதுகாப்பான நிலப்பகுதி க்குச் கொண்டு செல்லப்பட்டது

ஆலயம், தற்போது நவீனப் பொறியியல் உதவியுடன் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக, சாலையோரம் மற்றும் ரயில்வே தண்டவாளப் பகுதியில் இருந்த ஒரு வழிபாட்டுத் தலம் இடிக்கப்படாமல், அதன் பழைமை மாறாமல் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *