5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்.23இல் தேர்தல்! வாக்கு எண்ணிக்கை மே 4!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 16- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மே 4ஆ–ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4–ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வரும் 30ஆ–ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி, ஏப்ரல் 6ஆ–ம் தேதி நிறைவடைகிறது.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7–ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9–ஆம் தேதி கடைசி நாளாகும்,

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9–ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து மே 4–ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு மார்ச் 16–ஆம் தேதி முதல் மார்ச் 23–ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுக்கள் மீது மார்ச் 24–ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், வேட்புமனுக்களை திரும்பப்பெற மார்ச் 26–ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. மார்ச் 26–ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் – கேரளம்

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கும், 140 தொகுதிகளைக் கொண்ட கேரளா மாநிலத்திற்கும் ஏப்ரல் 9ஆ–ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

ஏப்ரல் 9ஆ–ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள கேரளத்தில், மார்ச் 16–ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 23ஆ–ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 24ஆ–ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மார்ச் 26ஆ–ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மே.4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதேபோல், ஏப்ரல் 9ஆ–ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்திலும் மார்ச் 16ஆ–ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 23ஆ–ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 24ஆ–ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறவுள்ளது. மார்ச் 26ஆ–ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மே.4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதியும் 2ஆம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *