இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க முடியாது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ரஷ்யா திட்டவட்டம்

மாஸ்கோ, மார்ச் 12 உக்ரைன் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இந்தியாவுக்குப் பெரும் கைகொடுத்து வந்த ரஷ்யாவின் ‘சலுகை விலை கச்சா எண்ணெய்’ இனி கிடைக்காது என்று கிரெம்ளின் மாளிகை அதிரடியாக அறிவித்துள்ளது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்குக் கிடைத்த பெரும் பின்னடைவாகவும், எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சவாலாகவும் பார்க்கப்படுகிறது

இந்தச் சூழலை இந்தியாவின் வெளியுறவு கொள்கை தோல்வி என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். “ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் திருப்திப்படுத்த முயன்ற இந்தியா, இறுதியில் இரு தரப்பிலும் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது” என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தியாவின் 88% கச்சா எண்ணெய் தேவை – – இறக்குமதியை நம்பியே உள்ளது. அதில் பெரும் பகுதியை சலுகை விலையில் வழங்கிய ரஷ்யா கைவிட்டுள்ளது, இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய

பொதுத் தராதர கல்வியில்

தமிழை பாடமாக்கத் திட்டம்!

மனுவில் ஒப்பமிடக்கோரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பிரித்தானியாவின் பொதுத் தராதர (GCSE) கல்வி தேர்வில் தமிழும் ஒரு பாடமாக உள்ளடக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உமா குமரனும், கரத் தோமசும் முன்வைத்து அதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் உயர்கல்வி தேர்வு அமைப்புகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்த மேற்கு ஹாரோ நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தோமஸ் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் நாடாளுமன்ற உறுப்பினரும்; ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமா குமரனும் இதற்கான புதிய கூட்டு பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

உலகின் பழைமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மேலும் உலகளவில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதாகவும் ஹரோ மற்றும் கிழக்கு லண்டன் பகுதிகளில் மிகப்பெரிய தமிழ் பேசும் சமூகம் இருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய பரீட்சையில் தமிழ்

இந்த நிலையில் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான இளையோர்கள் வீட்டிலும், உள்ளூர் சமூக அமைப்பு களிலும் தமிழைப் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது, இங்கிலாந்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழில் க.பொ.த தேர்வு இல்லையெனவும் தமிழில் கேம்பிரிட்ஜ் பன்னாட்டு அய்.ஜி.சி.எஸ்.ஈ (iGCSE) தரநிலை இருந்தாலும் அது தேசிய கட்டமைப்பின் ஒரு பகுதியாக இல்லையென்பதால் பிரித்தானியாவில் தேசிய தேர்வில் தமிழ் அங்கீகரிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த பரப்புரையில் தமிழ் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகக் குழுக்கள் இணைந்து இதற்குரிய மனுவில் ஒப்பமிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *