தி.மு.க. ஆட்சியில் தனிநபர் வருமானம் உயர்வு

1 Min Read

சென்னை, பிப். 28– தி.மு.க. சார்பில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

வளர்ச்சி அனைவரை யும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத் திலான ஆட்சி, அதுவே திராவிட மாடல்.

கடந்த 4 ஆண்டுகளில் (2021-2025), தனிநபர் வருமானம் ரூ.1.78 லட்சம் உயர்ந்து, வரலாற்றிலேயே அதிகமான ரூ.3.62 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. இது தமிழ்நாடு வரலாற்றில் மிக வேகமான தனிநபர் வருமான வளர்ச்சி காலமாக (19.4சதவீதம்) பதிவாகியுள்ளது.

20 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்ற அளவிற்கு சமமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தனிநபர் வரு மானம் முன்னேறி சாதித் துள்ளது.

தொழில் விரிவாக்கம், முதலீட்டை மய்யமாகக் கொண்ட வளர்ச்சி, மற்றும் மக்களின் வாங்கும் திறனை உயர்த்தும் நலத் திட்டங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய ஆட்சியின் நேரடி விளைவுதான் இந்த முன்னேற்றம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *