அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை விரைந்து வழங்க உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு

சென்னை, நவ.6 –   தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக் கான பணிவரன்முறை செய்தல், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிர்வாகப் பணிகள் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களால்  மேற் கொள்ளப்படுகிறது.

ஆனால், சில மாவட்டங்களில் இந்தப் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட காலத்தில் உரிய ஆணைகள் வழங் கப்படவில்லை எனவும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

எனவே, ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை செய்தல் போன்ற பணிகளில் அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான ஆணை களை எவ்வித புகார்களுக்கும் இட மளிக்காதவாறு விரைவாக வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஆணை வழங்காமல் இருப்பின் அதன் கார ணங்களை தெரிவித்து முழுமையான தொகுப்பறிக்கையை மாவட்ட அளவில் நவம்பர் 24ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *