வாக்காளர் பெயர் சேர்க்கை படிவம் சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்

2 Min Read

சென்னை,ஜன.13- பொங்கல் விழாவை யொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத் தியுள்ளார். இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவினை ஒட்டியும், தொடர் விடுமுறையின் காரண மாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால், இப்பணியை ஜனவரி 28 வரை நீட்டிப்பு செய்திடவும், ஜனவரி 24, 25 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.அய்.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை

இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் அய். ஆறுமுக நயினார் ஆகியோர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை நேற்று (12.1.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக, அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

சிபிஎம் கொடுத்த கடிதத்தில், “வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

வாக்காளர்கள் விடுபடும் அபாயம்

இந்நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் விழாவை ஒட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே ஜனவரி 10ஆம்  தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.

சிறப்பு முகாம்

வரைவு வாக்காளர் பட்டிய லில் திருத்தம், இணைப்பு ஆட்சேபணைகள் மீது முடி வெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24, 25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.

குளறுபடிகளுக்கு வாய்ப்பு

மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப் பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும், 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்ட வர்கள் ஆகிய எண்ணிக் கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறு படிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருது கிறோம். அது எங்களுடைய கணினி ஆய்வுக் குழு நடத்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விவரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *