அய்தராபாத், நவ. 27- அமெரிக்க செயற்கைக் கோளை, வணிக ரீதியில் அடுத்த மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள் ளதாக அந்த அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2040ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண் வெளி திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் விண்வெளித் திட்டங் களும் இருக்கும்.
அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைக்க்கோள் ஒன்றை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. தேதி இன்னும் முடிவாகவில்லை. அநேக மாக அடுத்தமாதமாக இருக்கும். அது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள். எல்விஎம்3 (Launch Vehicle Mark III) மூலம் அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப் பட உள்ளது. இது கூட்டுத் திட்டம் கிடையது. வணிக ரீதியில் செயல்படுத்த உள்ளோம்.
தற்போது விண்ணில் 57 செயற்கைக்கோள்கள் உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும். இந்திய வீரர்களை, விண்வெளிக்கு பத்திரமாக அனுப்பி, மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது. பூவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங் களிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சந்திரயான்- 4 மற்றும் 5 ஆகிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் -4 திட்டம் 2028இல் செயல்படுத்தப்படும். ஜப்பானின் விண்வெளி மய்யத்துடன் இணைந்து சந்திரயான்-5 செயல் படுத்தப்பட உள்ளது.
புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் செயற்கைக் கோளுக்கான தேவை அதிகமாக உள்ளது. அதனை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். இந்தியாவுக்கு என சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டவும் பணி யாற்றுகிறோம். இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாரா யணன் கூறினார்.
