பக்தி ஒழுக்கத்தை வளர்க்குமா? திருப்பதி கோவிலில் 20 கோடி கலப்பட நெய் லட்டுகள் விற்பனை!

தேவஸ்தான தலைவர் அதிர்ச்சி தகவல்

திருமலை, நவ.23 “திருமலை ஏழு மலையான் கோவிலில் கடந்த, 2019 – 2024 வரையிலான கால கட்டத்தில், 49 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், அதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை,” என, தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவி லுக்கு, நாள்தோறும் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகின்றனர்.

விசாரணை இங்கு, பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ‘ஒப்பந்தம்’ விடப்பட்டு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நெய் பெறப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர்.,காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன்  ஆட்சியில், அவ்வாறு வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது.

சம்பந்தப்பட்ட நெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.

இது தொடர்பாக, சி.பி.அய்., விசா ரணை நடத்தி வருகிறது. இதில், உத்தரகண்டைச் சேர்ந்த, ‘போலே பாபா’ பால் பண்ணை மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள கலப்பட நெய்யை திருமலை கோவிலுக்கு வினியோகித்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் சமீபத்தில் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.அய்., குழு, அவரது முன்னாள் உதவியாளர் சின்னா உபன்னாவை கைது செய்தது.

இந்நிலையில், கலப்பட நெய் விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தான தற்போதைய தலைவர் பி.ஆர்.நாயுடு வெளியிட்டுள்ளார்.

புள்ளிவிபரம் அவர் கூறுகையில், “கடந்த, 2019 – 2024 வரையிலான காலக்கட்டத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, 48.76 கோடி லட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை.

”கோவிலில் தினசரி மக்கள் வருகை, கொள்முதல் விபரங்கள், லட்டு உற்பத்தி மற்றும் விற்பனை புள்ளிவிபரங்கள் ஆகியவற்றை வைத்து எளிய கணக்கீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது,” என்றார்.

‘இந்த அய்ந்து ஆண்டுகளில், 11 கோடி பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும், கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட லட்டுகள் யாருக்கு வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

‘வி.வி.அய்.பி.,’க்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள் கூட கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியாது’ என தேவஸ்தான அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *