ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை

2 Min Read

மாஸ்கோ, அக். 25- உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

முன்னதாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது அய்ரோப்பிய யூனியனும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதேநேரம், இந்த நடவடிக் கைகள் பெரும்பாலும் பயனற்றவை என்று ரஷ்ய அரசின் ஊடகங்கள் நிராகரித்துள்ளன.

உக்ரைன் மீதான படை யெடுப்புக்கு நிதி ஆதாரமாகத் திகழும் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை நிறுத்தி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையை மேற்கொள்ள ரஷிய அதிபா் புதினைக் கட்டாயப் படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடைகள் கருதப்படுகின்றன.

பிரஸெல்ஸில் அய்ரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இந்த முடிவுக்காகவே நாங்கள் காத்திருந்தோம். இந்தப் புதிய தடைகள் போரின் முடிவுக்குப் பலனளிக்கும். இது மிகவும் முக்கியமானது. இது தவிர மேலும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்’ என்றாா்.

ரஷ்ய பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக எரி சக்தித் துறை உள்ளது. இது ரஷ்யா வில் பணவீக்கத்தை மோசமாக்காமல் மற்றும் நாணயச் சரிவைத் தவிா்த்து போருக்கான செலவினத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது.

அய்ரோப்பிய யூனியனின் இந்த புதிய நடவடிக்கைகள், தடைகளை ஏய்க்கும் வகையில் புனையப்பட்ட உரிமையாளா்களின் பெயா்களில் ரஷ்யா மறைமுகமாக இயக்கும் நூற்றுக்கணக்கான பழைய கப்பல்கள், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, ரஷ்ய நிதித் துறை ஆகியவற்றைக் குறிவைக்கின்றன.

மேலும், 27 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய யூனிய னுக்குள் ரஷ்ய செல்வாக்கு அதி கரிப்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு புதிய செயல்திட்டமும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

ரஷ்யா மீதான அய்ரோப்பிய யூனியனின் கூடுதல் தடைகள் பற்றிய அறிவிப்பைத் தொடா்ந்து 23.10.2025 அன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2 டாலா் வரை உயா்ந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *