பெங்களூரு, அக். 18- கருநாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு எதிரானது என மாநிலம் முழுவதும் செய்தி பரப்பப்படுகிறது.
இந்த நிலையில் சித்தராமையா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் இது தொடர்பாக கூறுகையில் “இது ஆர்.எஸ்.எஸ்.-அய் பற்றியது அல்ல. அரசு அனுமதி இல்லாமல் எந்தவொரு அமைப்புகளும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த விதிமுறை ஜெகதீஷ் ஷெட்டர் முதல மைச்சராக இருக் கும்போது பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 2013இல் பள்ளி வளாகம், அதனுடன் உள்ள விளையாட்டு மய்தானங்கள் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிக்கை விட்டிருந்தது. சாலைகள், பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.