சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றினை எடுத்துரைக்கும் ஒளிப்படக் கண்காட்சியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஒளிப்படங்களின் கருத்துகள் குறித்து எடுத்துக் கூறினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.நா. எழிலன், எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் மற்றும் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.