பெங்களூரு செப்.13=
கருநாடக மாநிலம் பெங்களூருவில் 11ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட் டில் அப்பாவு பேசியதாவது:
அரசியலைமைப்பு சட்டம்
அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்றும் இருந்தால்தான், மாநிலங்கள் சிறப்பாக இருக்க முடியும் என்ற அடிப்படையி லேயே இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டுள் ளது. ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்கியமானதாக இருப்பதற்காக கடந்த காலங்க வில் ராஜமன்னார், சர்க்காரியா, வெங்கடாசலய்யா, புஞ்சி தலைமையிலான குழுக்கள் பல் வேறு பரிந்துரைகளை வழங்கி யுள்ளன. மாநில ஆளுநரை நியமிக்க, முதலமைச்சரின் ஆலோச னையைபெறவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
சமீபகாலமாக, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல், நிர்வாக ரீதியான அறிவிப்புகள், அரசா ணைகள் மூலமாக கனிமவளம், மீன்வளம், கூட்டுறவு சங்கங்க ளுக்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளன. இது கூட்டாட்சிக்கு மிகப்பெரிய பின்ன
டைவு.
மேலும், ஒன்றிய அரசு, மாநி லங்களின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் பொருட்கள் மீது பல்வேறு வரிகளை விதிக்கிறது.
எந்தவிதமான நிதிப் பகிர்வையும் ஒன்றிய அரசு ஒழுங் காக மேற்கொள்வது இல்லை. ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்டத்தின்கீழ் மாநில அரசுக்கு தரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு இது வரை விடுவிக்கவில்லை. தனி யார் பள்ளிகளில் ஏழை குழந் தைகளுக்கு 25 சதவீத இடஒதுக் கீட்டுக்கான ஒன்றிய அரசின்பங் களிப்பான 60 சதவீத நிதியை கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்க வில்லை. 100 நாள் வேலை திட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாடு அரசு 11.19 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த 2019-24 காலகட்டத் தில் 17-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு குடியரசுத் தலை வர் ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளித்து சட்டமாக்கப் பட்டன. ஆனால், தமிழ்நாட்டில்ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்ட மசோதாக்கள் ஆண்டுக்கணக் கில் காத்திருக்கின்றன. இத னால், மக்கள்நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மாநில அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 16 மாநிலங்கள் உள்ளன. மாநில அரசுகளுடன் அதிகாரத்தை ஜெர்மனி அரசு சமமாக பகிர்ந்து கொள்கிறது.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கூறிய கருத்தின் அடிப்படை யில், மாநிலங்களுக்கு முழு மையாக நிதி சுயாட்சி வழங்க வேண்டும் அல்லது மாநிலங் களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.