ரேபரேலி, செப்.12 ‘வாக்கு திருட்டு குறித்து இன்னும் மோசமான ஆதாரத்தை வெளியிடவுள்ளேன்” என ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 2 நாள் சுற்றுப்பய ணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (11.9.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது: மகாராட்டிரா, அரியானா மற்றும் கருநாடகாவில் நடை பெற்ற தேர்தல்களில் எல்லாம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். வரும் நாட்களில் இன்னும் மோசமான ஆதாரத்தை நான் வெளியிடுவேன். “வாக்குகளை திருடியவர்கள், அரியணையை விட்டு வெளியேறுங்கள்” என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. மோசடி மூலம் அரசுகள் உருவாக்கப்படுகின்றன என்பது உண்மை. அதற்கான ஆதாரத்தை நாங்கள் அளிப்போம். அந்த ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்போது, அனைத்தும் சுத்தமாகிவிடும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
வாக்குத் திருட்டு குறித்து மேலும் மோசமான ஆதாரத்தை வெளியிடுவேன் : ராகுல் காந்தி ஆவேசம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books