வாக்குத் திருட்டில் ஈடுபடும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். – தேர்தல் ஆணையம்

2 Min Read

பீகார் பேரணியில் ராகுல் காந்தி பகிரங்கக் குற்றச்சாட்டு

பாட்னா, ஆக.31 பா.ஜ.க.–ஆர்.எஸ்.எஸ். – தேர்தல் ஆணையம் ஆகியவை வாக்குத் திருட்டில் ஈடுபடுகின்றன என பீகார் மாநிலத்தின் ஆரா பகுதியில் நடைபெற்ற பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தத்தை தேர்தல் ஆணை யம் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதைக் கண்டித்து பீகாரில் ‘‘வாக்காளர் அதிகார பேரணியை’’ ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

போஜ்பூரின் ஆரா பகுதியில் நேற்று (30.8.2025) நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:

வாக்காளர் பட்டியல் மாற்றிய மைக்கப்பட்டது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை வாக்குத் திருட்டில் ஈடுபடுகின்றன. மக்களின் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் தொடங்கப்பட்ட ‘‘வாக்காளர் அதிகாரப் பேரணியை’’ தேசிய இயக்கமாக மாறி யுள்ளது.

மகாராட்டிரா மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குகளைத் திருடி தே.ஜ. கூட்டணி அரசு வெற்றி பெற்றது. ஆனால், பீகாரில் ஒரு ஓட்டைக் கூட பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வாக்கு என்பது தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமை. ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நரேந்திர மோடி அரசு வாக்குகளைத் திருடுகிறது. வாக்குரிமையை அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ளது.

ஆனால், மக்களின் வாக்குரிமையை பா.ஜ.க. பறிக்கிறது. நாட்டின் இதர பகுதிகளில் வாக்குகளை பா.ஜ.க. மேலும் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தற்போது பா.ஜ.க. தலை வர்களை, வாக்குத் திருடர்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி உரையாற்றினார்.

அகிலேஷ்

இந்தப் பேரணியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகை யில் சரண் மாவட்டத்தில் நேற்று (30.8.2025) நடைபெற்ற பேரணியில் ராகுல், ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வியுடன் உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் பங்கேற்றார். கடந்த மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி யுற்ற லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றனர்.

இந்தப் பேரணி இதுவரை கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கி சராய், முங்கேர், கட்டிஹார், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, முசாபர்பூர், பூர்னியா, மேற்கு சம்பரண், கோபால்கஞ்ச்,கிழக்கு சம்பரண், சிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது  பாட்னாவில் நாளை (செப்.1) பேரணி நிறைவு பெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *