விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

1 Min Read

சென்னை, ஆக.28- விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 2018 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் இதர பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்ற, 40 வயதுக்கு உள்பட்ட போட்டியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி போட்டியாளா் களுக்கான வயது வரம்பு 50 ஆகும். சம்பந்தப்பட்ட பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை அவா்கள் பூா்த்தி செய்திருக்க வேண்டியதுடன், விண்ணப்பதாரா்கள் தமிழ்நாட்டை பூா்வீகமாகக் கொண்டவா்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்களின் இணைய வழி மூலம் விண்ணப்பங்களை, உரிய ஆவணங் களுடன் சோ்த்து வரும் செப்டம்பா் 24-ஆம் தேதிக்குள்ளாக ‘www.sdat.tn.gov.in’ என்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *