முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் உண்மையான மக்கள் தலைவர்! விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் புகழாரம்! பஞ்சாப் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்!

3 Min Read

சென்னை, ஆக.27– முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகவும் சிறப்பான திட்டம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓர் உண்மையான மக்கள் தலைவர்! தமிழ்நாட்டைப் பின்பற்றி பஞ்சாப் மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்! என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தின் விரிவாக்க விழா சென்னை மயிலாப்பூர் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் நேற்று (26.8.2025) நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான அழைப்பினை ஏற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினரா கப் பங்கேற்று முதலமைச்சர் அவர்களை பாராட்டியதுடன் பஞ்சாப் மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்புக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அவர்கள் முதலில் நன்றி தெரிவித்தார், அத்துடன், கல்வி, சுகாதாரம், உள்கட்ட மைப்பு ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் சிறந்த பணிகளைப் பாராட்டினார். பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையிலான வலுவான உறவைச் சுட்டிக்காட்டிய பஞ்சாப் முதல்வர் அவர்கள், காலை உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டைப் பார்த்து பெருமைப்படுகிறேன்!

“எங்கள் மாநிலத்திலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம்,” என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் கூறினார். இத்திட்டத்தால் தமிழ்நாட்டில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைகிறார்கள் என்பதை அறிந்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நகர்ப்புறப்பள்ளிகளையும் உள்ளடக்கி இந்தத்திட்டம் இன்று விரிவு படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குதல், வருகையை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இத்திட்டம்நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய சமூகப் பிரச்சினை களைக் கையாள்வதிலும், பொது நலனுக்காக வெற்றிகரமான திட்டங்களை ஏற்றுக்கொள்வதிலும் மாநிலங் களுக்குஇடையிலான ஒத்துழைப்பை பஞ்சாப் மாநிலமுதல மைச்சர் பகவந்த் மான் அவர்களின் தமிழ்நாட்டு வருகை வெளிப்படுத்துகிறது.

கல்வித் திறனை உயர்த்தும்!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சத்தான காலை உணவைவழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஆரோக்கியமான உணவை நாள்தோறும் உண்டு கல்விப் பணிகளை தொடங்குகிறார்கள். இது குழந்தை களின்ஆரோக்கியம், பள்ளி வருகை மற்றும் கல்வித் திறனை மேம்படுத்த உதவுகிறது என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டின்வளர்ச்சியைப் பார்க்கும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓர் உண்மையான மக்கள் தலைவர் என்பதை உணர முடிகிறது.

இங்கே அமர்ந்திருக்கும் மாணவ, மாணவியரே, இது உங்களுக்கான திட்டம்தான் இந்த திராவிட மாடல் அரசுஉங்களுக்காகத்தான் இதை செய் திருக்கிறது. உங்களுக்காக உழைக்கும் சிறந்த முதலமைச்சர் இவர்தான் என்று முதலமைச்சர் அவர்களைச் சுட்டிக் காட்டி குறிப்பிட்டார். தொடர்ந்து, “நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்ட போது மாணவர்களிடம் இருந்து பலத்த ஆரவாரத்துடன் “ஆம்” என்று மகிழ்ச்சியான முழக்கம் பதிலாகக் கிடைத்தது.

தொடர்ந்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் அவர்கள் பேசும் போது, “தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டம் ஒரு மிகவும் புதுமையான திட்டம். இது ஒன்றிய அரசுக்கும் பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரி திட்டமாக விளங்குகிறது. இந்த சிறப்பான காலை உணவுத் திட்டத்தை எங்கள் அமைச்சரவையில் விவாதித்து பஞ்சாப் மாநிலத்திலும் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *