புதுடில்லி, ஆக.24– பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று மீண்டும் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.11 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீக்கப்பட்ட 65 லட்சம் பீகார் வாக்காளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டதாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. தவறாக நீக்கப்பட்டி ருந்தால் மீண்டும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க லாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், பல ஆயிரம் வாக்காளர்கள் வெளி மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளதாகவும், மழை வெள்ளம் பாதிப்பு உள்ள நிலையில் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பதில் சிக்கல் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விண்ணப்பம் 6 மூலம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர் களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர். 11 ஆவ ணங்களில் ஒன்றைகட்டாயமாக வழங்க வேண்டும் என்று வாக்காளர்களை நிர்ப்பந்திக்கக்கூடாதுஎன்றும், விண்ணப் பங்களை நேரில் வழங்க வேண்டும் என்றுகட்டாயப்படுத்தக் கூடாதுஎனவும் தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலமாக பெற வேண்டும் எனக் கூறினர். மேலும், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட் டியலில் மீண்டும் சேர்க்க உதவவேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
