காரைக்கால் போலகம் கடைவீதியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

காரைக்கால், ஆக. 18- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா  நிறைவு மாநில மாநாட்டை விளக்கி காரைக்கால் மாவட்டம் போலகம் கடைவீதியில் 17-08-2025 மாலை 6 மணியளவில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம், நிகழ்விற்கு தலைமை வகித்தார். சிவ புகழ், தாமரைச் செல்வம், நீலம் மணி கண்டன், ராகுல், ஆகிய வர்கள் நிகழ்விற்கு முன் னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக பொன்முடி, தொடக்க உரையாற்றினார்.

கழக பேச்சாளர் மாங்காடு சுப. மணியரசன், சிறப்புரையாற்றினார்.

காரைக்கால் மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் ஜவகர், காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் பி.டி. முரளி, மற்றும் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர்  பிரவீன் பிர்லா, ஆகியோர் உரையாற்றினார்கள்.நிகழ்வில்  பொறுப்பாளர் களும்,  பொதுமக்களும், பள்ளி, கல்லூரி, மாண வர்கள், வியாபாரிகளும் ஆங்காங்கு நின்று பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *