லபுபு பொம்மை அனுமார் போல் இருக்கிறதாம்; பூஜை அறையில் வைத்து வாழைப்பழம் தந்து பூஜைகள் செய்யும் அவலம்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் லபுபு என்ற பொம்மையை அறிமுகப்படுத்தியது. பல்வேறு வண்ணங்களில் இருக்கும் இந்த பொம்மைகள் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி யாபாத் நகரத்தில் இந்த பொம்மையை வாங்கியவர்கள் இது அனுமார் போல உள்ளது என்று கூறி பூஜை அறையில் வைத்து கும்பிட ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல, அனுமாருக்கு உகந்த தாகக் கூறிக் கொண்டு, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அந்தப் பொம்மைக்கு வாழைப்பழம் கொடுத்து பூஜை செய்கின்றனர்.
‘கொய்னோ கொய்னோ’
இதே பழுப்பு நிற லபுபு பொம்மையை மத்திய அய்ரோப்பாவின் நம்பிக்கையின்படி ‘கொய்னோ கொய்னோ’ என்ற கெடுதல் செய்யும் தேவதையைப் போல் உள்ளது என்று கூறி, பொம்மைகளை தீயிலிட்டு எரித்தனர். இந்தியாவில் அனுமார் என்று கூறி, பூஜை அறையில் வைத்து வாழைப்பழம் கொடுத்து பூஜை செய்கின்றனர்.