டேராடூன், ஆக.9– உத்தரகாசியில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத் தில் சிக்கியவர்களில் இதுவரை 650 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியை விரைவு படுத்துவதற்காக பாகீரதி ஆற்றில் ராணுவம் தற் காலிக பாலத்தை அமைத் துள்ளது.
அதி கனமழை
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட் டது.இதில் தராலியில் இருந்த ஏராளமான உணவு விடுதிகள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கட்டட இடிபாடுகள் ஆங்காங்கே குப்பைகளாக குவிந்து கிடந்தன. வெள்ளத்தில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் உள்பட பலர் காணாமல் போனார்கள். 4 பேர் மண்ணில் புதைந்து பலி யானார்கள். அவர்களில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
650 பேர் மீட்பு
மீட்பு பணியில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் இந்தோ-திபெத்திய காவல் படை யினர் ஒருங் கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த பணியில் சுமார் 800 பேர் ஈடுபட்டு வரு கிறார்கள்.
நிலச்சரிவுகளால் ஏற் பட்ட போக்குவரத்துத் தடை களை தாண்டி இந்த மீட்புப் பணி நடந்து வருகிறது. பல் வேறு இடங்களில் சிக்கித் தவித்தவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும்பணி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று வரை 250 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 650 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர், காணாமல் போனவர் களில் ஹர்சில் முகாமில் இருந்த 9 ராணுவ வீரர்களும் அடங்கு வார்கள். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தேடும்பணி
பெருவெள்ளத்தில் சிக்கியவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணியில் டிரோன்கள், மோப்ப நாய்கள், நவீன கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன.மீட்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மாட்லி நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹர்சிலியில் சிக்கி தவித்தவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்தவர்கள் ஸ்டிரெக் சர்கள் மூலம் விமானத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகீரதி ஆற்றில் பாலம்
மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, வெள்ளம் பாய்ந்தோடும் பாகீரதி ஆற்றில் ராணுவம் தற் காலிக பாலத்தை அமைத்துள்ளது. மீட்கப் பட்டவர்கள் அந்த பாலத்தின் வழியாக அழைத்து வரப்பட்டு, வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கிறார்கள்.மீட்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள வர்கள், தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்காக செயற்கைக் கோள் உதவி யுடன் தொலைபேசி கட்டமைப்புகளை ராணு வம் ஏற்படுத்தியுள்ளது.கங்கோத்ரியில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்கும் முயற்சி நடந்து வருவதாக ராணுவ உயர் அதிகாரி டி.ஜி.மிஸ்ரா கூறினார்.
முதலமைச்சர்
மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி. நேற்று (8.8.2025) காலை மீட்புக் குழுவினருடன் பேசி நிலவரம் குறித்து கேட்ட றிந்தார்.
இதற்கிடையே பேர ழிவை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், தராலியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளில் பீகார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். மேலும் தங்கும் விடுதிகளிலும் ஏராளமானோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி இருக்கலாம் எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.