புதுடில்லி, ஆக.7– இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக அதிகரித்த டிரம்பின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘டிரம்பின் 50 சதவீத வரியானது ஒரு பொருளாதார மிரட்டல் ஆகும். நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மீது திணிக் கும் முயற்சி. பிரதமர் மோடி தனது பலவீனத்தை இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்க விடாமல் இருப்பது நல்லது’ எனகுறிப்பிட்டு உள்ளார்.