பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும், வாருங்கள் படிப்போம் குழுவும் இணைந்து நடத்தும் ‘வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை’ இன்று (20.7.2025) காலை பெரியார் திடலில் தொடங்கியது. 120 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நிகழ்வாக ‘பால சாகித்ய புரஸ்கர் விருது‘ பெற்றுள்ள சிறுவர் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனைப் பாராட்டிச் சிறப்பித்துக் கேடயம் வழங்கப்பட்டது. திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி பாராட்டி உரையாற்றினார். உடன் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பொதுச் செயலாளர் பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் குமரன், வாருங்கள் படிப்போம் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா மகேஸ்வரி, பேரா.இரா.செங்கொடி ஆகியோர் உள்ளனர்.
சென்னை பெரியார் திடலில் ‘வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை’ – சாகித்ய அகாடமி விருதாளருக்குப் பாராட்டு

Leave a Comment