புதுடில்லி, ஜூன் 20– மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளை யொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலை வா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூட் டணிக் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட் டோா் நேற்று (19.6.2025) வாழ்த்து தெரிவித்தனா்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவான வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா் ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்புச் சட்ட மாண்புகளுக்கான அா்ப்பணிப்பும், புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார நீதியை உறுதி செய்வதற்கான இரக்க குணமும் மற்றவா்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை, நல்லி ணக்கம், கருணை ஆகிய காங்கிரஸின் சித்தாந்தங்களை உங்களின் செயல் பாடுகள் பிரதிபலிக்கின்றன. உண் மையை அதிகார பீடத்தில் அமா்த்தி, கடைசி நபருக்கான ஆதரவையும் உறுதி செய்யும் உங்கள் பணிகள் தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் வலைதளத்தில், ‘இரக்க குணமே உண்மையான மாற்றத்தின் தூண்டுகோல் என்பதை தனது அச்சமில்லாத நோ்மை, அயராத உறுதிப்பாட்டின் மூலம் ராகுல் நமக்கு உணா்த்தி வருகிறாா். நீதிக்கான உண்மையான போராளி. சமத்துவத்துக்காக குரலற்றவா்களின் குரலாக ஒலிப்பவா்’ என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா்கள் கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட், சமாஜ்வாதி தலைவா் அகிலேஷ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.