‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 7 ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ், கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத் மாநிலத்திற்கு 605 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்திற்கு 509 கோடி ரூபாயும், அரியானா மாநிலத்திற்கு 180 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கேலோ இந்தியா இணையதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடலூர், திருவாரூர் மற்றும் தூத்துக்குடியில் பல்நோக்கு விளை யாட்டு அரங்குகள் மற்றும் தூத்துக்குடியில் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப் புத் திட்டங்களுக்காக 12 புதிய முன்மொழிவுகளைக் கடந்த ஆண்டு ஒன்றிய அரசிடம் அளித்தது தமிழ்நாடு அரசு. ஆனால், இந்தத் திட்டங்கள் யாவும் ஒன்றிய அரசால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

ஒரேயொரு மைதானத்திற்காக மட்டும், குஜராத் மாநிலம் 580 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கான திட்டங் களுக்கு ஒப்புதல் தரப்படும்போது, தமிழ்நாட்டில் உள்ள மாவட் டங்களுக்கான திட்டப் பணிகளுக்கு மட்டும் ஏன் இந்தத் தாமதம் என்ற கேள்வி எழுகிறது.

‘‘திராவிட மாடல்’’ ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. துணைநின்று ஊக்கப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு, உரிய நிதியை ஒதுக்காமல், வஞ்சிக்கலாமா என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே, தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்திற்கான நிதி விடுவிக்கப் படவில்லை, 2023-இல் தமிழ்நாடு கேட்ட பேரிடர் நிதி வரவில்லை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட நிதிக்குப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான நிதி காரணமின்றி தாமதப் படுத்தப்படுகிறது. இப்போது, அந்தப் பட்டியலில் ‘கேலோ இந்தியா’வும் சேர்ந்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *